மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை
சென்னை ஆவடியில் டியூஷன் படிக்க வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரும், உடந்தையாக இருந்ததாக தனியார் பள்ளி ஆசிரியையான அவரது மனைவியும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நரேஷ் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவியும் தனியார் பள்ளி ஆசிரியையுமான விஜயலட்சுமி வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவரிடம் டியூஷன் படிக்க வந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு நரேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் அது குறித்து கேட்டபோது தம்பதியரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், இவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.





