1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்!
கொரொனா அச்சத்தின் காரணமாக பள்ளி இறுதித் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளும் பாஸ் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
144 தடை உத்தரவு குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் டூ மாணவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீ கடைகளில் தேவையில்லாமல் கூட்டம் சேர்வதை தடுக்க இன்று மாலையில் இருந்து மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும் டீக்கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.







