--- --:--:-- --

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

13

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்தது. கோவை மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

சின்னக்கல்லார், சோலையாறு, அணை கருமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சோலையார் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக நீரார் அணை பகுதியில் என்பது ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

இதனிடையே கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. அதிகபட்சமாக வண்டலூர் பகுதியில் 66 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon