அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்ட நிலையில், இன்று இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு கட்டங்களிலும் சென்னையில் ராயபுரம் தவிர மற்ற 12 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 3ம் கட்டமாக வெளியிட்டப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் சென்னையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அதன்படி இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு : –
1.ஆயிரம் விளக்கு – பா.வளர்மதி
2.அண்ணாநகர் – கோகுல இந்திரா –
3.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி- ஆதி ராஜாராம்
4.திட்டக்குடி (தனி) – முருகுமாறன்
5.துறைமுகம் – ராயபுரம் ஆர்.மனோ
6.விருகம்பாக்கம் – விருகை வி.என்.ரவி
7.தியாகராயநகர் – சத்தியநாராயணன்
8.வேளச்சேரி – எம்.கே.அசோக்
9.சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்
10.ஆர்.கே.நகர் – ஆர்.எஸ். ராஜேஷ்
11.வில்லிவாக்கம் – எஸ்.ஆர்.விஜயகுமார்
12.திருச்சுழி – ராஜவர்மன்
13.ஆலந்தூர் – எஸ்.சரவணன்
14.கொளத்தூர் – பி.சந்தான கிருஷ்ணன்
15.திரு.வி.க நகர் (தனி) – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
16. எழும்பூர் (தனி) – அபிஷேக் ரங்கசாமி
17.ஆலங்குடி- தன.விமல்
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சரை எதிர்த்து சந்தான கிருஷ்ணனு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சரை எதிர்த்து ஆதிராஜராமும் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலினை கொளத்தூரில் எதிர்கொண்ட அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமை, இம்முறை சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நிறுத்தியுள்ளார்.
இவர் ஏற்கெனவே 2006ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு 2,468 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரம் கடந்த 2021 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கிய இவர், 35,138 வாக்குகளை மட்டுமே பெற்றார்.





