வேளாண் சட்டம் – மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்
சட்டம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பஞ்சாப் மாநிலம் சிங்கு எல்லையில் போராடி வரும் வேளாண் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் அறிவித்துள்ளார். விவசாயிகளோடு பேச்சுவார்த்தைக்கு வரும் முன் மத்திய அரசு திருந்த மனமுடன் வர வேண்டுமென்றும் சட்டம் தொடர்பாக ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்க்கிறோம் என்றும் அதேநேரம் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் எழுத்துப்பூர்வமான உறுதியுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் அமர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்றொரு விவசாய தலைவரான சிவக்குமார் போராடும் விவசாயிகள் எளிமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தும் சூழலையும் மத்திய அரசு அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேநேரம் மத்திய அரசும் தனது பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.







