--- --:--:-- --

ஊசி வடிவில் போதை சாக்லெட்..! உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!

3

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

காவல் உதவி ஆணையர் அளித்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவில் உள்ள கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஊசி வடிவில் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

 

ஊசி வடிவில் போதை சாக்லேட்டை ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தேதி குறிப்பிடாமல் இருந்த பிஸ்கட், ஜெல்லி, ஜூஸ் உள்ளிட்ட அனைத்தையும் சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

 

Right Menu Icon