--- --:--:-- --

சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை த்ரிஷா மீது புகார்..!

10

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை த்ரிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஹரிகேஷ் பகுதியில் உள்ள நர்மதை நதிக்கரையில் நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

 

அப்போது படகில் இருந்து இறங்கிய திரிஷா கரையில் உள்ள சிவாலயத்தில் நந்தி சிலையருகே காலணி அணிந்து நடந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து நடிகை த்ரிஷா மற்றும் இயக்குனர் மணிரத்தினம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon