--- --:--:-- --

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது..!

4.1

றைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் திடீர் மரணம் சக நடிகர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரையில் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி வெள்ளித்திரையிலும் ஜொலிக்க தொடங்கிய நிலையில் கொரொனா பொது முடக்க தளர்வு களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்றிருக்கிறார்.

 

15 நாட்களுக்கு முன்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவருக்கு மீண்டும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

படப்பிடிப்புகளில் பரபரப்பாக இயங்கி வந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் சக நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர் தனுஷ், விவேக் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இறுதி சடங்கு நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த வடிவேல் பாலாஜி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

 

வாழும் நாட்களில் பிறரை மகிழ்விக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த வடிவேல் பாலாஜி அதன்படியே வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon