நடிகை நித்யாமேனன் தனக்குள் இருந்த தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்து விட்டேன் என கூறியுள்ளார்..!
கொரோனாவால் வாழ்க்கை போராட்டமாக மாறிவிட்டது என நடிகை நித்யா மேனன் கூறியிருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் நடித்த காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கொரொனா பலரின் வாழ்க்கையை போராட்டமாக மாற்றி விட்டது என தெரிவித்துள்ளார். அதேபோல் நிறைய பேர் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் போராடி வருகிறார்கள். எங்களைப் போன்றவர்களையும் வேலை இல்லாமல் தவிக்க வைத்துவிட்டது கொரோனா எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த காலகட்டத்தில் தனக்குள் இருந்த தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்து விட்டதாகவும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.






