--- --:--:-- --

காங். செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பூ நீக்கம்

11.5

டிகை குஷ்பூ பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவர் வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

நடிகை குஷ்பூ, பாஜகவில் இணையப் போவதாக கடந்த ஒரு வருடமாகவே அவ்வப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பி வந்தது. இந்நிலையில் அது உண்மையாகி இன்று பாஜகவில் குஷ்பூ இணைவது உறுதியாகிவிட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இனணய டெல்லியில் குஷ்பூ மூகாமிட் முள்ளார்.

 

இந்நிலையில் குஷ்பூ பாஜகவில் இணையப் போவது உறுதி என்ற நிலையில், காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக அவரை கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரணவ் ஷா வெளியிட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கும் முடிவை பாஜகவில் குஷ்பூ இணைந்த பின் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon