நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி அக்கட்சியில் இணைந்தார். நடிகை கஸ்தூரி மற்றும் Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகியோர் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். பாஜக மாநில தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இது தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்தும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்.
சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரியும் நமீதா மாரிமுத்துவும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழ்நாடு பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து, நடிகை கஸ்தூரி நாளை (ஆகஸ்ட் 16,) அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






