--- --:--:-- --

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்..!

13

மும்பைக்கு பிழைப்புக்காக வருபவர்கள் பின்னர் நகரத்தின் பெயருக்கு இழிவு ஏற்படுத்துவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியதற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிந்தி நடிகர் சுஷாந்த்தின் மரணத்திற்குப் பிறகு மகாராஷ்டிர அரசுடன் நடிகை கங்கனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

 

மும்பையில் வாழ்வதற்கே அச்சமாக இருக்கிறது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு போல நகரம் மாறி வருவதாகவும் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக சிவசேனா தலைவர் கங்கனா ரனாவத்திற்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தசரா விழாவில் பேசிய சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் பின்னர் நகரத்தின் பெயருக்கு இழிவு ஏற்படுத்துவதாக கங்கனா ரனாவத்தை மறைமுகமாக சாடியிருந்தார்.

 

மேலும் மும்பை நகரவாசிகள் தங்களது வீட்டில் துளசியை நட்டு வைத்து பூஜித்து வருவதாகவும் இமாச்சல பிரதேசத்தில் தான் கஞ்சா பயிரிடப்படுவதாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அவரது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் கங்கனா இமாச்சல பிரதேசம் பார்வதி தேவியின் பிறந்த இடம் என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு மற்றொரு மாநிலத்தை தவறாக பேசலாமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 

மேலும் தந்தை சேமித்து வைத்த சொத்தையும் அவரது பெயரையும் பயன்படுத்தி வாழும் பழக்கம் தங்களுக்கு தான் இருக்கிறது என்றும் டுவிட்டரில் அவர் காட்டமாக கூறியிருக்கிறார்.

 

Leave a Reply

Right Menu Icon