--- --:--:-- --

காஸ்மெட்டிக் சென்டரில் கொழுப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை உயிரிழப்பு..!

7

கொழுப்பு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை திடீரென மரணம் அடைந்திருப்பது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

 

அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையே காஸ்மெட்டிக் சென்டரின் கவனக்குறைவு மரணத்திற்கு காரணம் என நடிகையின் பெற்றோர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon