--- --:--:-- --

பிளாஸ்மா தானம் செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள்..!

8

கொரொனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருமாறு நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து குணப்படுத்தும் சிகிச்சை தற்போது நடைமுறையில் உள்ளது.

 

டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் பிளாஸ்மா வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் கொரொனாவை வென்றவர்கள் பிளாஸ்மா தானமளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரொனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை காக்க பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon