அதிக மார்க் பெற்ற பிளஸ் டூ மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க திட்டம்..!
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்க நடிகர் விஜய் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் இருபதாம் தேதிக்குள் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பட்டியலை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை வரும் முப்பதாம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு வெளியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் பட்டியலை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.





