நடிகர் ஷாருக்கான் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு..! பின்னணி என்ன..?
மும்பையில் நடிகர் ஷாருக்கானை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார் பிரசாந்த் கிஷோர்.
அவருடன் ஷாருக்கான் தமது இல்லத்தில் விருந்து உபச்சாரம் செய்து கொண்டு 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது அனுமானங்களை எழுப்பியுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை வெப்சீரிஸ் ஆக படமாக்கி அதில் ஷாரூக்கான் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் நண்பர்கள் என்றும் இது நட்பு ரீதியான சந்திப்பு தான் என்றும் ஷாருக்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







