--- --:--:-- --

ஜெயிலர் 2 படத்துக்காக கொச்சி சென்ற நடிகர் ரஜினிகாந்த்..!

5

ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.mரஜினியின் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

 

வரும் ஜூன் மாதம் இப்படத்தை திரையிட திட்டமிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பொங்கல் விடுமுறையை வீட்டில் கழித்த நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் விமானத்தில் கொச்சி சென்றனர். ஜெயிலர் 2-ல் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon