--- --:--:-- --

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!

4

பரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர்கள் சிலைகளிலிருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறை கதவுகள் உள்ளிட்டவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடை குறைந்ததாகப் புகார் எழுந்தது. இதில், துவார பாலகர்கள் சிலை உள்ளிட்டவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கம், மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அந்த வகையில் முக்கிய நபராக தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போட்டி மீது, குற்றஞ்சாட்டப்பட்டது. உன்னிகிருஷ்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் கோயிலின் தந்திரியும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலிருந்து தன்னை பிணையில் விடுவிக்குமாறு உன்னிகிருஷ்ணன் தரப்பு கொல்லம் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் அம்மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழு 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டி பிணை வழங்குமாறு வாதிடப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும், கருவறை கதவுகளில் பதிக்கப்பட்ட தங்கம் திருட்டு விவகாரத்தில் பதியப்பட்டுள்ள மற்றொரு வழக்கிலும் அவர் பிணை பெற்றால் மட்டுமே விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Right Menu Icon