நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம் பறிப்பு..!
நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம் பறித்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து தருவதாகக் கூறி தன்னிடம் இருந்த 70 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக ஜெர்மன் இலங்கை தமிழ் பெண் புகார் அளித்திருந்தார்.
நடிகர் ஆர்யா மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தகுந்த பணத்தை மீட்டுத் தருமாறு அந்த பெண் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்யாவையும் போலீசார் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். மேலும் விசாரணையில் தன்னை புளியந்தோப்பே சேர்ந்த முகமது என்பவர் சமூக வலைதளங்களில் நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெர்மன் இலங்கை தமிழ் பெண்ணிடம் பேசி வந்ததும் நடிகர் ஆர்யாவின் பெயரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்தது தெரியவந்தது.
அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினரையும் போலீசார் கைது செய்தனர்.







