நெருங்கிய நண்பர்களுடன் சென்று பிணமாக வீடு வந்த இளைஞர்..!
நண்பனை மது அருந்த அழைத்து சென்ற இளைஞர்கள் கொலை செய்த வழக்கில் கைதான இருவர் போலீசில் அளித்த வாக்கு மூலம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஆயக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். எலக்ட்ரீசியன் ஆன இவரை அவரது நெருங்கிய நண்பர்களான பன்னீர்செல்வம் மற்றும் சுரேஷ் ஆகியோர் மது அருந்த அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் இளைஞர்கள் சுரேஷ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியவரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களுடன் தீவிர விசாரணை நடத்தினார். அப்பொழுது கடந்த ஆறு வாரத்திற்கு முன்பு சுரேஷின் நண்பர் ஆன சிவா என்பவர் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த சம்பவத்தில் தற்பொழுது கொலை செய்யப்பட்ட ராஜ் குமார் தான் இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சம்பவத்தன்று மது அருந்திய போது பேசும்போது தகராறு ஏற்பட்டு ராஜ்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வரவே, அவரின் நண்பர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.





