மாடு குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலி..!
கன்னியாகுமரி மாவட்டம் மேகா மண்டபம் அருகே மாடு ஒன்று புகுந்ததால் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
செம்பிரா விளையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் திருவீட்டாரில் இருந்து சென்றுள்ளான். பூவன்கூடு அருகே எதிர்பாரதவிதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடி வந்ததால் அதி வேகமாக வந்தவர் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாடு மீது உரசினார்.
பின்னர் வாகனத்தை நிறுத்த முடியாமல் வேகமாக சென்று சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் மாடும் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.






