--- --:--:-- --

மதம் மாற வற்புறுத்தி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை..!

10

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் மத்திய உளவுத்துறை அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதுடன் பெண்ணை மதம் மாற வேண்டும் என மணமகள் வீட்டார் வற்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சென்னை அடையாறில் ராஜாஜி பவனில் உள்ள மத்திய உளவுத்துறையில் அதிகாரியாக பணி புரிபவர் ஹரிஷ் குமார். இவரது மனைவி 23 வயதான நிகிதா விசாகப்பட்டினத்தை சேர்ந்த இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது.

 

அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி படுக்கை அறையில் நிகிதா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என எழுதி கையெழுத்திட்ட கடிதமும் கைப்பற்றப்பட்ட சம்பவ நாளில் ஹரிஷ் குமாரும் அவரது தாயாரும் வீட்டில் இருந்துள்ளனர்.

 

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வரதட்சனை கொடுமை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon