பேருந்தை முந்தி செல்ல முயன்ற விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி..!
சென்னை திருவொற்றியூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பேருந்தை முந்தி செல்ல முயன்ற பொழுது கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். நெல்லையம்மன் கோயிலுக்கு அருகே மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பணிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தை எல்லையம்மன் கோயில் வழியாக ரத்து செய்துள்ளார். அப்பொழுது மாநகர பேருந்தை முந்தி சொல்ல முயன்ற பொழுது பேருந்தில் அடிபட்டு அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






