முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவு..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற பொழுது அவரை துணை ராணுவ படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரது ஆதரவாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் துணை ராணுவப்படை நீதிமன்றத்தை அவமதித்துவிட்டு இம்ரான் கான் கைது செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒருவரை நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி கைது செய்வது எப்படி என வினா எழுப்பியது. இதனையடுத்து இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்டார்.






