--- --:--:-- --

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்..!

8

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் தாய், அவரது கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்மணிக்கும் ஜெகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து அந்த பெண்மணி தன்னுடைய மகனுடன் மதுரைக்கு சென்றுள்ளார். ஜெகனின் தம்பி பழனி அந்த பெண்மணியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்மணி பழனியை வீட்டைவிட்டு அனுப்புமாறு கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பழனி அந்த பெண்ணின் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து அந்த பெண் குழந்தையோடு ஈரோட்டுக்கு திரும்பியபோது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் குழந்தையை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

 

தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தகவலறிந்து விசாரணையில் இறங்கிய போலீசார் தப்பிச் சென்ற அந்தப் பெண்ணையும் ஜெகன் மற்றும் பழனியையும் கைது செய்துள்ளனர்.

 

Right Menu Icon