திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பாதை கேட்டு பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை அருகே சம்பை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ராணி (35) இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லை என்றும் தானும் தனது பிள்ளை என கோரிபலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை கடைசியாக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் திருவாடானை தாசில்தார் அலுவலகத்தை அணுகி கொள்ள உத்தரவிட்டின் பேரில் இன்று தாசில்தார் அலுவலகத்தை சந்திக்க இருந்த போது அவரது இடத்துக்குரிய பட்டா வேறு ஒரு பெயரில் இருந்ததாகவும் அவர் திமுக பிரமுகர் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.
தனது மகளுடன் தாலுகா அலுவலகம் வந்தவர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். உடன் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை காப்பாற்றினர். இதற்கு திருவாடானை தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்





