--- --:--:-- --

பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப்போவதாக மிரட்டிய உச்சிப்புளி வாலிபர் கைது

19

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி சிவக்குமார், 23. இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை துவங்கி அதில் பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களின் ஆபாச படங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை பணம் கொடுத்தால் அழித்து விடுவேன் எனவும் இல்லையெனில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி வந்தார்.

 

இதில் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வெளியிட்டுள்ள பிரத்யேக தொலைபேசி எண் 94899 19722 தொடர்புகொண்டு புகார் அளித்தார்.இதனடிப்படையில் உச்சிப்புளி போலீசார் சிவக்குமாரை கைது செய்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

கைது செய்யப்பட்ட வாலிபரிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருடைய சமூக வளைதள கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon