--- --:--:-- --

ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த பெண்..!

5

திருச்சியில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா.

 

இவருக்கும் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் ராஜரத்தினத்தின் மகன் தினேஷ் என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 11 வயதில் மகன் உள்ளார்.

 

இந்த நிலையில் மற்றொரு பெண் உடன் கணவருக்கு உள்ள தொடர்பை தட்டி கேட்டதால் கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாகவும் தொழில் தொடங்குவதற்காக தன் நகைகளை வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

 

இந்நிலையில் தனது மாமனார் கட்சி பின்புலம் கொண்டவர் என்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை மிரட்டி வருவதாகவும், தான் அளித்த புகார் மிக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இது குறித்து ஸ்ரீரங்கம் உதவி ஆணையரிடம் கேட்ட பொழுது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Right Menu Icon