--- --:--:-- --

இரவில் வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை..!

5

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த யானை வாழை மரங்களை சேதப்படுத்தியது. புளியம்பாறை அத்திப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம். இவர் தோட்டத்தில் இணைந்து நேந்திரம் வாழை பயிரிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் இரவில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை அங்கு இருந்த வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது. காடுகளில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு தேடி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon