அபாகஸ் முறை மூலம் வேகமாக கணக்கிடுதல் மற்றும் அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள்..!
தஞ்சாவூரைச் சேர்ந்த உமா என்ற ஆசிரியை அபாகஸ் முறை மூலம் வேகமாக கணக்கிடுதல், அதிக ஞாபகத் திறன் மூலம் சொற்களை ஒப்புவித்தல் மற்றும் அதி விரைவாக எழுத்துக் கூட்டுதல் போன்றவற்றில் நான்கு மாணவர்களை பயிற்றுவித்து அவர்கள் மூலம் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் .
இந்த நிகழ்வானது மதுரை கே.புதூரில் அமைந்துள்ள அல்-அமீன் மேல் நிலைப் பள்ளியில் அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷேக் நபி அவர்களின் முன்னிலையில் நடைபெறற்றது.
இதில் அவனிகா ஸ்ரீ என்னும் 6 வயது சிறுமி 110 ஆங்கில சொற்களை 2 நிமிடங்களில் எழுத்துக் கூட்டிச் சொல்லுதல். சந்திகா எனும் 13 வயது மாணவி 80 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை சரி செய்தல், சுஜின் 5 வயது உடைய மானவன் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களுடன் ஒப்புவித்தல், பிரஜன் 7 வயது மாணவன் 160 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை 2 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகளில் சரி செய்தல் போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்வைக் கண்காணிக்கும் நடுவர்களாக நிமலன் சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் இருந்து மாணவாகளுக்கு சாதனைகள் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் நினைவுக் கேடயம், பதக்கம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.





