காட்டுக்குள் வந்தவர்களை துரத்திய காட்டு யானை..!
கேரள மாநிலம் வயநாட்டில் பைக்கில் சென்ற இருவரை காட்டு யானை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்தானியிலிருந்து சோக்காடி செல்லும் சாலையில் சச்சின் மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் பைக்கில் பயணித்துள்ளனர்.
அப்பொழுது சாலையில் வந்த காட்டு யானை தாக்க முற்பட்ட நிலையில் அச்சமடைந்த இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். சரக்கு வாகன ஓட்டுனர் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் யானை காட்டுக்குள் ஓடியது.
கீழே விழுந்த நபர் யானையை பார்த்து அச்சத்துடன் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.





