பணியில் இருந்த பொழுது மயங்கி விழுந்த போக்குவரத்து காவலர்..மனைவி வெளியிட்ட வீடியோ..!
நீலகிரி மாவட்டம் உதவையில் உடல்நிலை சரியில்லாத போக்குவரத்து காவலர் பணியில் இருக்கும் பொழுது மயங்கி விழுந்தார். உதகை நகர போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் கலையரசன் உடல்நிலை சரியில்லாததால் மாத்திரைகளை உட்கொண்டு விட்டு பணிக்கு சென்ற நிலையில் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பியிடம் சென்று அவர் விடுப்பு கேட்டதாகவும் அவர்கள் வழங்கவில்லை எனவும் கலையரசனின் மனைவி தெரிவித்துள்ளார்.
தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருந்தால் அதற்கான முழு பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஏற்க வேண்டும் எனவும் அவர் காணொளி வெளியிட்டுள்ளார்.






