--- --:--:-- --

திடீரென சுவற்றில் விழுந்த விரிசல்.. நொடிப்பொழுதில் வீதிக்கு வந்த மக்கள்..!

7

சென்னை பெருங்குடியில் கட்டுமான பணியின் பொழுது ஆறு வீடுகள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பெருங்குடி திருவள்ளுவர் நகரில் தனியார் நிறுவனம் 4 மாடி கட்டிடம் அமைக்க கட்டுமான பணியை மேற்கொண்டு வருகிறது.

 

இன்று சுற்றுச்சூழல் அமைக்க பத்து அடி பள்ளம் தோண்டப்பட்டது. அப்பொழுது அதன் அருகே இருந்த இரண்டு வீடுகளில் சுவர் இடிந்து சேதமானது. 4க்கும் மேற்பட்ட வீடுகள் சரிந்து விழக்கூடிய நிலையில் உள்ளன.

 

அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon