தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..!
மலையாள படங்களில் நடித்து வந்த ரதிஷா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அதன் பின் ஜெய்பீம் போன்று படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
படங்களில் ஒலிப்பதிவாளராக பணியாற்றி வரும் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் திருமணம் செய்ய உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.





