வீட்டில் தனியாக கேம் விளையாடிய மாணவன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட சோகம்..!
அரக்கோணத்தில் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய 18 வயது இளைஞர் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டு பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் தீபன்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் தற்பொழுது இருந்துள்ளான். இவனது தந்தை இறந்த நிலையில் அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறான். தாய் மற்றும் இவன் வீட்டில் உள்ள நிலையில் இவர் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றுவரை நன்றாக இருந்த தீபன் திடீரென்று இன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல நடந்து கொண்ட சம்பவம் வீட்டில் இருந்து அனைவரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர்.
மேலும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய மாணவன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






