--- --:--:-- --

நடித்துக் கொண்டிருந்தபோதே உயிரைவிட்ட மேடை கலைஞர்..!

5

மேடை கலைஞர் ஒருவர் நடித்துக் கொண்டிருந்தபோதே உயிரைவிட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியின் போது கலைஞர் ஹனுமான் வேடமணிந்து நடித்துக் கொண்டிருந்தார்.

 

ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்ததும் நடிப்பு என நினைத்த மக்கள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர். கீழே விழுந்து அவர் எழுந்திரிக்கவில்லை என பார்த்த பொழுது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon