வனத்துறையினரை விரட்டிய ஒற்றைக் காட்டு யானை..!
கூடலூர் அருகே ஒற்றைக் காட்டு யானை வனத்துறையினரை விரட்டியது. நீலகிரி மாவட்டம் சோதனை சாவடி பகுதிக்கு காட்டு யானை ஒன்று அடிக்கடி வந்து செல்கிறது.
இதனை கண்ட வனத்துறையினர் யானையை வனப்பகுதியில் அனுப்ப முற்பட்ட பொழுது வனத்துறையினரை யானை விரட்டியது. அப்பொழுது நாய்கள் குரைத்ததால் யானை சென்றது.





