--- --:--:-- --

ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்..!

1

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம் தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.

 

விசாலாட்சி நகரை சேர்ந்த அர்ஜூனன் என்பவரின் ஒன்றரை வயது மகன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது தலை அங்கிருந்து சிறு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டது. இதனால் அலறித் துடித்த குழந்தையை பெற்றோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மருத்துவர்கள் உதவியுடன் குழந்தையின் தலையில் மாட்டியிருந்த சில்வர் பாத்திரத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெட்டி எடுத்தனர்.

 

Right Menu Icon