உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை நீலத்திமிங்கலம்..!
ஆந்திராவில் 25 அடி நீளமுள்ள அரியவகை நீல திமிங்கலம் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஆந்திராவில் கனமழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீகாக்குலா மாவட்டத்தில் உள்ள மேகமரம் கடற்கரையில் சுமார் 25 அடி நீளமும் 5 டன் எடையும் கொண்ட அரிய வகை நீலத்திமிங்கலம் கரை ஒதுங்கியது. இந்த நீலத்திமிங்கலத்தை காண்பது அபூர்வம் என அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஆழ் கடலில் காணப்படும் இந்த திமிங்கலம் குறைந்த ஆழம் உள்ள பகுதிக்கு வந்ததால் இறந்திருக்கலாம் என கூறிவிட்டனர். கரை ஒதுங்கிய திமிங்கலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பார்த்து சென்றனர்.





