--- --:--:-- --

நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது அதிவேகமாக மோதிய டாரஸ் லாரி..!

7

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் மேம்பாலம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

பெங்களூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து பயணிகளை இறக்கி விட நிறுத்திய பொழுது பின்னால் வேகமாக வந்த லாரி உடனே நிறுத்த முடியாமல் மோதியதில் பேருந்து மேம்பால பக்கவாட்டு சுவரை இடித்து அதில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. விபத்தினால் வண்டலூர் வாலாஜாபாத் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரி செய்தனர்.

 

Right Menu Icon