--- --:--:-- --

பாலியல் அத்துமீறலில் மீண்டும் ஒரு பாதிரியார்.. பெண்களிடம் அத்துமீறல்..!

10

தென்காசியில் தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இருந்த புகாரில் பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 

பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமி புறத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி என்பவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்ணைப் பெற்று பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் பாதிரியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து ஸ்டான்லி குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

 

Right Menu Icon