--- --:--:-- --

51 ஐ‌பி‌எஸ் அதிகாரிகள் ,14 மாவட்ட எஸ்‌பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்த தமிழக அரசு..!

9

51 ஐ‌பி‌எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரவளி பிரியாவும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

கரூர் மாவட்ட எஸ்பியாக பகலவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை, நெல்லை, திருச்சி ,கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களையும் பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 51 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

14 மாவட்ட எஸ்‌பிக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நெல்லை, மதுரை, கோவை நாமக்கல் மாவட்ட எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மதுரை மாவட்ட எஸ்பியாக சுஜித்குமார், கோவை மாவட்ட எஸ்பி யாவை அற அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மணிவண்ணன், காஞ்சிபுரம் சண்முகப்பிரியா, திருச்சி ஜெயச்சந்திரன் எஸ்‌பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

தஞ்சை தேஷ்முக் சேகர், புதுக்கோட்டை பாலாஜி சரவணன், ஈரோடு தங்கதுரை, நாமக்கல் எஸ்பி சக்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி பத்ரிநாராயணன், கரூர் பகலவன், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon