--- --:--:-- --

தனிமையில் இருக்க இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை அடித்து கொன்று கொடூரம்..!

6

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனிமைக்கு இடையூறாக இருந்ததாக ஒரு வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்ததாக தாய், அவரின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.

 

கிருஷ்ணகிரியில் செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த மலேஷுக்கும் ஈரோட்டில் சேர்ந்த கலைவாணிக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டது.

 

அந்த நபருக்கும் வேறொரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் ஒரு வயது குழந்தையின் தாயான கலைவாணியை அழைத்துக்கொண்டு சேலம் மாவட்டம் புதூர் காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்தார்.

 

அங்கு தனிமையில் இருந்த பொழுது குழந்தை அழுததால் குழந்தையை இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. மயக்கமடைந்த குழந்தையை செங்கல் சூளை காவலாளி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. குழந்தை இறந்தது தெரிய வரவே கர்நாடகாவிற்கு தப்பிச் சென்ற இருவரையும் தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon