ஸ்கூட்டிக்குள் நுழைந்த நல்ல பாம்பு.. நூலிழையில் தப்பிய வாகன ஓட்டிகள்..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்ட நல்ல பாம்பை வனத்துறையினர் பெருமுயற்சிக்கு பிறகு உயிருடன் மீட்டனர்.
விஜி என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஸ்கூட்டியை எடுத்துச் சென்ற பொழுது அதில் பாம்பு புகுந்ததில் பார்த்ததும் அதனை வொர்க் ஷாப்பிற்கு கொண்டு சென்றார்.
அங்கிருந்து ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஸ்கூட்டி என்ஜின் பகுதியில் சிக்கியிருந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.





