புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு..!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மூன்று நாட்களில் மேற்கு, வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



