--- --:--:-- --

கணவர் கண் முன்னே காதல் மனைவியை கடத்தி சென்ற பெற்றோர்..!

6

தென்காசியில் கணவர் கண் முன்னே காதல் மனைவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கடத்தி சென்ற பெற்றோர் உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

 

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும் அதே பகுதியை சேர்ந்த வினித் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

 

இவர்கள் இருவரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு பாதுகாப்பு கேட்டு குற்றாலம் காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.

 

திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் பொழுது பெண் வீட்டார் காரில் வந்து தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 

இந்த நிலையில் வினித் மற்றும் கிருத்திகா தென்காசி பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு அடியாட்களுடன் வந்த கிருத்திகாவின் பெற்றோர் வாகனங்களை அடித்து உடைத்து கிருத்திகாவை அழைத்து சென்றுள்ளனர்.

 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் மகளை கடத்தி சென்ற பெற்றோர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon