--- --:--:-- --

பூண்டி நெசவாளர் காலனி இஸ்லாமிய மக்கள் சார்பில் மிலாது நபி  விழா..!

6

திருப்பூர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் சார்பில் அப்பகுதியில் மீலாது நபி  விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சுலைஹா தலைமை தாங்கினார். ஆபிதா வரவேற்றார்.

 

ரெகினா, ரினிஷா ஆகியோர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்கள். தொடர்ந்து மாணவிகள் அல் ரிஃபா, ரிதா ஃபாத்திமா, தஸ்லிமா,  நஸ்ரின், அலைனா, ஜெஸினா,  மாணவர்கள் வாஹித், அஸ்லம், ஆசிப், அப்னாஸ்,  இப்ராஸ் ஆகியோர் இசுலாமிய பாடல்களை பாடினார்கள்.

 

பின்னர் பஷீர், ஹம்சா,முஹம்மது பஷீர்  ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முடிவில் சித்திக் நன்றி கூறினார். விழாவில் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Right Menu Icon