--- --:--:-- --

மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தனது இரு மகள்களுடன் சிலிண்டரை வெடிக்க செய்து இறந்த தாய்!

10

விபத்தில் சிக்கிய மகன் சிகிச்சை பலனின்றி இறந்த காரணத்தால் தாய் தனது இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதிருச்சி மாவட்டம் நவல்பட்டு பூலாங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜய கௌரி.

 

ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். 32 வயதான மகள் விஜயலட்சுமி 29 வயது மகள் விஜயராணி வீட்டில் இருந்த நிலையில் மகன் விஜயக்குமார் டிப்ளமோ முடித்து விட்டு தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

சிகிச்சை ஓரளவுக்கு முடிந்ததால் விஜயகுமாரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து சென்று பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் விஜயகுமாரின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து விஜய கௌரி மற்றும் குடும்பத்தினர் 108க்கு போன் செய்து ஆம்புலன்சை வரவழைத்து உள்ளனர்.

 

வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் விஜயகுமாரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் விஜய கௌரி சகோதரிகள் விஜயலக்ஷ்மி, விஜய வாணி ஆகியோர் கடும் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் விஜய கௌரியின் வீட்டிலிருந்து பெரிய அளவில் வெடி சத்தம் கேட்ட நிலையில் வீடு வெடித்து சிதறி தீ பிடித்து எரிந்துள்ளது.

 

அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு பகுதி இடிந்த நிலையில் விஜய கௌரி, விசயலட்சுமி, விஜய வாணி ஆகிய 3 பேரும் உடல் சிதறி இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாவல் பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் மகன் இறந்த சோகம் தாங்காமல் தாயுடன் சகோதரிகளும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

 

மகன் மீது உயிரையே வைத்திருந்த தாய் உயிரிழந்ததால் திருமண வயதில் இருந்த மகள்களோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon