--- --:--:-- --

14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி..! டுவிட்டர் பதிவில் பிந்து பதிவிட்டது என்ன?

11

நடிகை பிந்து மாதவி வசித்துவரும் குடியிருப்பில் ஒருவருக்கு கொரொனா உறுதியானதை அடுத்து அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் பிந்துமாதவி வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள இன்னொரு வீட்டை சேர்ந்த நபரொருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

இதையடுத்து குடியிருப்பு கேட்டை மூடி விட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள வீடுகளில் வசிப்போர் அனைவரையும் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் இந்த தகவலை பிந்து மாதவியும் உறுதிப்படுத்தியுள்ளார். அதைப்போல தடுப்புகளை வைத்து குடியிருப்பு கேட்டை ஊழியர்கள் மூடும் வீடியோவையும் டுவிட்டர் பதிவில் பிந்து மாதவி பகிர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon