அழுகிய நிலையில் தாய், மயங்கிய தந்தை.. பூட்டிய மகன்!
டெல்லியிலுள்ள பெற்றோர் நீண்ட நாள்களாக போனுக்கு பதிலளிக்காததால், ஹாங்காங்கில் இருந்த மகள் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உள்புறமாக பூட்டப்பட்ட வீட்டின் கதவை திறக்க மகன்(50) மறுக்கவே, உறவினர்கள் போலீசை அழைத்தனர்.
கதவை உடைத்த போது, அழுகிய நிலையில் தாயும் (65), உணவின்றி மோசமான நிலையில் தந்தையும் (70) கிடந்துள்ளனர். மகன் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவர, அபார்ட்மெண்ட் வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.






